Close
நவம்பர் 21, 2024 6:25 மணி

தஞ்சையில் விடுதலைப் போராட்ட வீரர்,பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தம் 61 வது நினைவேந்தல்

தஞ்சாவூர்

தோழர் ப.ஜீவானந்தம் 61 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

விடுதலைப் போராட்ட வீரர்,பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ப. ஜீவானந்தம் 61 -ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது .

இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர், கலை இலக்கிய பேராசான், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு தெற்கு எல்லை போராட்ட வீரர், தாய்மொழி தமிழை நேசித்தவர். ஆண்டான்- அடிமை சநாதன முறைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவுவாதி. பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற நூலை மொழி பெயர்த்தவர்.

தேசத்தந்தை காந்தியால் இந்திய நாட்டின் சொத்து என்று மதிக்கப்பட்ட தலைவர். தனது வாழ்நாள் இறுதிவரை பொதுவுடமை சமுதாயம் அமைந்திட போராடியவர். சட்டமன்ற உறுப்பினர், ஆண்டு தோறும் கம்பன் விழாவை எடுத்து நடத்தியவர். எண்ணற்ற எழுத்தாளர், கவிஞர், கலைஞர்களை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் எனும் அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டிற்கு தந்தவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின்  61 -ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை(18.1.2024) காலை 11 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் தலைமை வகித்தார்.நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார், வெ.சேவையா, மாநகர துணைச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன்.

அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் காரல் மார்க்ஸ், நிர்வாகி பாலசுப்பிரமணியன் , ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், சிஐடியு நிர்வாகி எஸ்.ராமசாமி, ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன், ஓய்வு பெற்றோர் சங்கதுணைதலைவர் கே.சுந்தரபாண்டியன்,  ஜி.சண்முகம், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, ஜி.கணபதி, விசிறி சாமியார்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மனுதர்ம சநாதன கொள்கைகளை முறியடிப்போம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட்  பாஜக அரசையும், ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்புகளையும் முறியடிப்போம், சுரண்ட லற்ற சமுதாயம் உருவாக்கிட சோசலிச சமுதாயம் படைத்திடுவோம் என அனைவரும் முழக்கமிட்டு உறுதி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக ஜீவானந்தம் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top