தஞ்சை மாவட்டத்தின் முதுபெரும் தொழிற்சங்க தலைவர், ஆர்.பொன்னுசாமி(89) வியாழக்கிழமை (18-1-2024) அன்று காலமானார்.
ஒன்று பட்ட தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகள் திறம்பட செயலாற்றி யவர். கரூர் வைஸ்யா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
கரூர் வைஸ்யா வங்கியின் தொழிற்சங்க நிறுவனத் தலைவர் களில் ஒருவர். கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தி உரிமைகளை பெற்றுத் தந்தவர்.
ஓய்வு பெற்றபின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளராக பொறுப்பேற்று செயல்பட்டவர். பேங்க் ஆப் தஞ்சாவூர் நிறுவனத்தையும் ஊழியர்களையும் பாதுகாக்க நடைபெற்ற போராட்டத்தில் முன்னின்று போராட்டத்திற்கு வழிகாட்டி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
வங்கி ஊழியர்களுக்கு வீடுகட்ட ஏற்பாடாக வங்கி ஊழியர் காலனி உருவாக முதன்மையானவர். தன் வாழ்நாள் முழுதும் உழைக்கும் மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்ப ணித்து வாழ்ந்து காட்டியவர்.
நேர்மை, நெஞ்சுரம், பழகுகின்ற உயர்பண்பு என அனைத்தி லும் உயர்ந்தவர். சரோஜா என்ற மனைவி சந்தானகிருஷ்ணன், வழக்கறிஞர் லெனின் ஆகிய இரு மகன்களும் சிவகாமசுந்தரி நாகேஸ்வரி இரு மகள்களும் உள்ளனர்.
இவரது இவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலம் 19-1- 2024 பகல் 3:00 மணிக்கு நடைபெற்றது. இதில், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், உற்றார், உறவினர் கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்புக்கு பி.லெனின். 9443268227 .