Close
நவம்பர் 21, 2024 6:50 மணி

ஒன்றிய மோடி அரசின் விவசாயிகள் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 26 விவசாயிகள் டிராக்டர் பேரணி

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங் கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்

தொழிலாளர்- விவசாயிகள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஜனவரி 26 -ல் விவசாயிகள் டிராக்டர் பேரணியுடன், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனத்துடன் தொழிலாளர்கள் பங்கேற்பதென ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு.

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங் கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்க தலைவர் களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள தொமுச மின்வாரிய தொழிலாளர் சங்க அலுவலகத்தில்  19.1.2024  மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சோ.பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராடி பெற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களை சுருக்கியது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்தும், விவசாயிகளின் பிரதான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய மோடி அரசை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 16 -ல் நாடு முழுதும் கிராமங்கள், நகரங்கள் தோறும் பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்னதாக உபி லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொல்லப்பட்ட நாள் மற்றும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கப் பட்ட நாளான ஜனவரி -26 அன்று நாடு முழுதும் டிராக்டர் பேரணி, வாகன பேரணிகள் நடத்த அறைகூவல் விடுக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் 26-1 -2024 அன்று பிற்பகல் 3 மணிக்கு தஞ்சையில் டிராக்டர் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்துடன் பங்கேற்கும் வாகன பேரணியை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடு களும் செய்வதன முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள். முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி சந்திரகுமார், மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே. ராஜன், மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேலு, தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top