Close
நவம்பர் 24, 2024 7:14 மணி

தஞ்சையில் தியாகிகளான நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் 42 வது நினைவு நாள்

தஞ்சாவூர்

குடந்தையில் நடைபெற்ற ஏஐடியுசி சங்க கூட்டம்

விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் , சமூக மாற்றத்திற்காகவும் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முதல் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் தியாகிகளான நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் 42வது நினைவு நாளில் ஏ ஐ டி யு சி  சங்கத்தினர் உறுதியேற்பு.

நாடு விடுதலை பெற்ற பிறகு மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக1982 ஜனவரி 19  -ல் நடைபெற்ற முதல் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில்,ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாய சங்க தொழிலாளர்கள் நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் ஆகிய தியாகிகளின் 42 வது நினைவேந்தல் கூட்டம்  கும்பகோணம் ஏஐடியூசி கூட்ட அரங்கில் ஏஐடியூசி மாவட்ட நிர்வாகி சி.தண்டபாணி தலைமையில் (19.1.2024) நடைபெற்றது.

ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் பேசியதாவது: நாடு விடுதலை பெற்ற பிறகு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்று காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.

இந்த போராட்டத்தின் விளைவாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டது  போன்ற  போராட்டத்தை பற்றி நினைவுகளை குறிப்பிட்டு உரையாற்றினார்.

தஞ்சாவூர்
குடந்தையில் நடைபெற்ற ஏஐடியுசி சங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

இந்த கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தர்மராஜன், ஏஐடியூசி நிர்வாகிகள் கலையரசன், சுந்தரராஜன் தொலைத்தொடர்புத் துறை மதி, தாராசுரம் மார்க்கெட் மணி, மின்வாரிய சங்க நிர்வாகிகள் முருகையன் விஜயபால் ஜான், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சரவணன்.

காமராஜ் ,பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் விவசாய தொழிலாளர்கள்,ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், சமூக மரியாதை பெறவும், சுரண்டல் இல்லாத சமுதாயத்தை படைத்திட ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என உறுதி ஏற்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top