Close
ஜூலை 2, 2024 1:37 மணி

கந்தர்வகோட்டை அருகே உளவயல் கிராமத்தில் அறிவியல் விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி உளவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் அறிவியல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி உளவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் உளவயல் கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் அறிவியல் பிரசாரம்  தொடங்கப்பட்டது.

நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட துளிர் திறனறிவுத் தேர்வு இணை ஒருங்கிணைப்பாளரும், வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் சதாசிவம் மந்திரமா தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சியில் உடையாத அறிவியல் தீக்குச்சி, சுவை உணர்தல், உராய்வு வேகம், காற்றழுத்தம் உள்ளிட்ட அறிவியல் நிகழ்ச்சிகளையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காகிதப்பைகள் பயன்பாடு குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 ன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

கிராமங்கள் தோறும் அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற நிகழ்வை அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது அறிவியலை மக்களின் ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் காக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், குழந்தைகள் துளிர் திறனறிவுத் தேர்வினை எழுத வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் இருந்து வருங்காலத்தில் அரசு பணிகளை பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் .

அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் இது போன்ற பணிகளில் பொதுமக்கள் மாணவர்கள் அறிவியல் இதழான விஞ்ஞான சிறகு துளிர் அறிவுத் தென்றல் போன்றவற்றை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்தம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், தொடர்ந்து கல்வி கற்க வேண்டியதை வலியுறுத்தும் எதனாலே? எதனாலே? உள்ளிட்ட அறிவியல் பாடல்களை பாடினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் பிச்சைமுத்து மாணவர்கள் பரிசோதனை கள் மூலம் கற்கும் போது மட்டுமே அறிவியல் மனப்பான் மையை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

அறிவியல் சமூகத்திற்கே அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் அறியாமையை அகற்று வோம் பிளாஸ்டிக்கை பைகளை ஒழிப்போம் காகித பைகளை பயன்படுத்வோம் கழிவுகளைமக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை கொட்டுவோம் என்று விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு விழிப்புணர் ஏற்படுத்தினர்.

முன்னதாக கிளைச் செயலாளர் மேனகா வரவேற்றார். நிகழ்வில் கலந்து கொண்டு மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியில் விடையளித்த மாணவர்களுக்கு துளிர் மாத இதழ் வழங்கப் பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top