Close
ஜூலை 4, 2024 3:52 மணி

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்திய பத்திரிகைகள் தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்திய பத்திரிகைகள் தினம் கொண்டாடப்பட்டது

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்திய பத்திரிகைகள் தினம் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தின் சார்பில் இந்திய  பத்திரிகைகள்  தினம் கடைபிடிக்கப்பட்டது.

இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார பொருளாளர் தங்கராசு இந்திய பத்திரிகைகள்  தினம் குறித்து பேசியதாவது:

ஜனநாயகத்தின் நான்காவது தூண்தான் பத்திரிகை .உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கிறது.மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ் படிப்பது அவசியம்.
மாணவர்கள் செய்தித்தாள்களைப் பிறர் சொல்வதற்காக அல்லாமல் தமக்காகவே தினமும் ஆர்வத்துடன் கற்க வேண்டும். விஞ்ஞான, இலக்கிய விளக்கங்களையும் புள்ளி விவரங்களையும் குறிப்பெடுத்து, தம் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

உள்ளங்கையில் அடங்கிவிட்ட செல்லிடபேசியின் தொழில் நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன், லேப்டாப் , கம்ப்யூட்டர் என தொழில்நுட்பக் கருவிகள் வாயிலாகவும் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேரப் பார்க்க முடியும்.

எனினும், காலைப் பொழுதில் செய்தித்தாள் படிப்பதுடன் அன்றைய நாளைத் தொடங்குவது என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் பழக்கமாக இருக்கிறது என்றார் அவர். தன்னார்வர்கள் அனைவரும் செய்தித்தாள்கள் வாசித்தனர்.நிறைவாக சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top