Close
மே 12, 2024 9:00 காலை

தூய்மைபாரத இயக்கம்: மேலப்பனையூர் ஊராட்சிக்கு ஆட்சியர் விருது

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியரிடம் விருது பெறும், மேலப்பனையூர் ஊராட்சித்தலைவர் ஆர். மேகநாதன்

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சிக்கு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) முன் மாதிரி கிராம விருதினை (2022-23) மேலப்பனையூர் ஊராட்சிமன்றத் தலைவர் மேகநாதனிடம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா வழங்கினார்.

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப் பட்டது.  இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top