Close
நவம்பர் 24, 2024 10:06 காலை

நம்மாழ்வார் பிறந்த ஏப்ரல் 6 -ல் பிறந்தநாள் விழா மற்றும் பாரம்பரிய நெல், விவசாய கண்காட்சி, கருத்தரங்கம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நம்மாழ்வார் பிறந்த ஏப்ரல் 6ல் பிறந்தநாள் விழா மற்றும் பாரம்பரிய நெல், விவசாய கண்காட்சி, கருத்தரங்கம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் பிறந்த ஏப்ரல் 6 -ல் பிறந்தநாள் விழா மற்றும் பாரம்பரிய நெல், விவசாய கண்காட்சி, கருத்தரங்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு பற்றியும், இயற்கை விவசாயம் பற்றியும் கூறியதை நகரம் முதல் கிராமம் வரை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிரீன் நாடா அமைப்பின் பொறுப்பாளர் ராஜவேலு தலைமை வகித்தார். வழக்கறிஞர் சி.சந்திரகுமார் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் நம்மாழ்வார் என்னும் ஆளுமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், காலம் நமக்கு கட்டளையிட்டிருக் கிறது.

உண்ணும் உணவே, நஞ்சாக மாறி மனிதரை சிதைக்கும் உணவுமுறை ஒருபுறம் , பிரபஞ்ச பெரு வெளியை ரசாயன கூறுகள் அழித்து ஒழிக்க படையெடுத்து நிற்கும் பேராபயம் மறுப்புறம். இந்த அபாயம் மிகுந்த காலத்தில் நம்மாழ்வரை புரிந்து கொள்ளல் அவசியமானகும்.

மனிதரையும், பிரபஞ்பத்தையும் பாதுகாக்கும் வீரிய மிக்க கருது கோள்களை உருவாக்கி தந்தவர் நம்மாழ்வார். உலக அளவில் இவரது கருத்துகள் இன்று புகழ் பெற்று வருகிறது என மகேந்திரன் உரையாற்றினார்.

கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு எனும் கிராமத்தில் நம்மாழ்வார் 1938 -ஆம் ஆண்டு, ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்த நாளில் ,அவர் பிறந்த ஊரில் நம்மாழ்வார் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்துவது.

நம்மாழ்வார் பெயரில் பொங்கல் வைத்து கொண்டாடும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நம்மாழ்வார் ஆர்வலர்கள், அறிஞர்கள் சான்றோர்களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 7, 8 -ஆம் தேதிகளில் தஞ்சை யிலே அவருடைய பெருமைகளை நிலை நாட்ட கூடிய வகை யில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி, பாரம்பரிய நெல் மற்றும் விவசாய பொருட்கள் கண்காட்சி நடத்துவது என்றும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதற்கான கூட்டு செயல்பாட்டு பணிகளை கம்யூனிஸ்டு இயக்கத்தை சார்ந்த மூத்த செயல்பாட்டாளர் சி.மகேந்திரன், கீரின் நீடா அமைப்பின் பொறுப்பாளர் ராஜவேலு, தவச்செல் வன், நாரயணனன் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top