இந்திய ஜனநாயக வாலிபர் சங்ககத்தில் இரத்ததாணக்ககழக மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 17, 18 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததாணக்கழக மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாதீர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏவி.சிங்காரவேல், மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் ஆகியோர் சிறப்புரையாற் றினர். நுடைபெற வேண்டிய பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் பேசினர்.
கூட்டத்தில் வரவேற்புக்குழுத் தலைவராக பிரபல குழந்தை கள் நல மருத்துவர் எம்.ராமதாஸ், செயலாளராக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், பொருளாளராக காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க நிர்வாகி எம்.ஏ.ரகுமான் உள்ளிட்ட 75 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.