Close
நவம்பர் 21, 2024 7:28 மணி

தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நடைபெற்ற தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுககூட்டம்

தஞ்சாவூரில் தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நூல் அறிமுக கூட்டம் தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு தலைவர் எழுத்தாளர் சாம்பான் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு சார்பில் அமைப்பின் சார்பில் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் ராவணன் கூட்டத்தின் நோக்கம் பற்றி தொடக்க உரையாற்றினார்.

முனைவர் அரச முருகு பாண்டியன் எழுதிய போதிய நாயகி யும் புகழ் பூத்த சேவையும் என்ற நூலை முனைவர் கண்ணையன் அவர்களும், தலித் கவிதைகள் பற்றி கவிஞர் நா.விச்வநாதன், முனைவர் திராவிட மணி ஆகியோர் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்கள்.

தந்தை பெரியாரின் மொழி இலக்கிய சிந்தனைகள் எனும் நூல் குறித்து முனைவர் தெ.வெற்றிச்செல்வன் அறிமுக உரையாற்றினார்.

தஞ்சாவூர்
நூல் அறிமுக விழாவில் பங்கேற்றோர்

நிகழ்ச்சியின் சிறப்புரையாக நாவலாசிரியர் தூத்துக்குடி ஸ்ரீதர கணேசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் கோ. ஜெயசங்கர் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.

தலித் கவிதைகள் நூல் ஆசிரியர் முனைவர் அரச முருகு பாண்டியன், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனை நூலாசிரியர் முனைவர் உ.பிரபாகரன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார்கள். முடிவில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top