Close
நவம்பர் 21, 2024 4:03 மணி

ஊராட்சி வீட்டுவரியை ஆன்லைன் மூலம் கட்டுவது எப்படி..?

தமிழ்நாடு

ஆன்லைன் மூலம் வீட்டு வரி கட்டலாம்

ஊராட்சி வீட்டு வரியை ஆன்லைன் மூலம் கட்டுவது எப்படி என்ற முழு விவரம்( tamil nadu village panchayat property tax online payment) அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும் (வட்டார ஊராட்சிகள்) மற்றும் 36 மாவட்ட ஊராட்சிகளும் உள்ளன.

இதில்,வீட்டுவரி / சொத்துவரி/தொழில்வரி/ குடிநீர் கட்டணம்/

தொழில்களுக்கான உரிமம் மற்றும் பிற வரியல்லாத வருவாய் இனங்கள் ஆகியன வசூல் செய்யப்பட்டு வருகின்றது

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற் சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது.

மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையதளத்தில் நீங்கள் சொத்து வரி கணக்கீடு, வரி நிலுவைத் தொகையை பார்க்க, விரைவாக வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்கும் வசதி உள்ளது

ஆன்லைன் மூலம் வரி கட்டுவது எப்படி..

https://vptax.tnrd.tn.gov.in/ தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.அடுத்து அதில் வரி செலுத்த என்பதை கிளிக் செய்யுங்கள்அடுத்து வரும் பக்கத்தில் pay tax என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்

அடுத்ததாக உள்ள படிவத்தில் உங்கள் பெயர் உங்கள் மொபைல் எண், உங்கள் இ- மெயில் முகவரி, பதிவிட்டு அடுத்து உங்கள் மாவட்டத்தை செலக்ட் செய்து, உங்கள் தாலுகா செலக்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்தாக உங்கள் ஊராட்சியை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து முக்கியமாக சொத்து வரி, குடிநீர் வரி , இதர வரி என உள்ளதில் நீங்கள் செலுத்த வேண்டிய உங்கள் வரியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து மிக முக்கியமாக உங்கள் வரி விதிப்பு எண்ணை பதிவிடுங்கள்.

உங்கள் வரி விதிப்பு எண் மிகவும் முக்கியம் வரி விதிப்பு எண் தெரியவில்லை என்றால் நீங்கள் ஏற்கனவே கட்டிய வரி விதிப்பு ரசீதில் இருக்கும் அல்லது உங்கள் ஊராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வரி விதிப்பு எண்ணை கேட்டு பெறுங்கள்.

அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் அவ்வளவு தான்.அடுத்து உங்கள் விவரங்கள் உங்கள் வீடு வகை மற்றும் நிலுவைத்தொகை எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களும் வரும்

அதில் உங்கள் வரிவிதிப்பில் உள்ள நிலுவை தொகையை ஆன்-லைனில் செலுங்கள் அதன்பின்பு வரி ரசீது உங்கள் இ- மெயிலுக்கு வந்துவிடும் அவ்வளவுதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top