புதுக்கோட்டை சமூக ஆர்வலர்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், ரோட்டரி சங்கங்கள், ஜேசிஐ அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மரம் நண்பர்கள் இணைந்து, மருத்துவர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், நகரின் சுகாதாரத்திற்காக பணியாற்றும் பெண் சுகாரப்பணியாளர்கள் பாராட்டப்பட்டார்கள்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். 230 பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு எவர் சில்வர் வாளி நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் மின்மயானத்தில் பணியாற்றும் பெண்களும் பாராட்டப்பட்டனர்.
அதே போல் புதிய பேருந்து நிலையத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பூ வியாபாரம் செய்யும் தன்னம்பிக்கை பெண்மணி கவிதாவும் பொன்னாடை அணிவித்து சிறப்புப் பரிசு வழங்கி கெளரவப்படுத்தப்பட்டார்.
நிகழ்வில் திருக்குறள் கழகத் தலைவர் ராமையா, இளங்கோவடிகள் இலக்கிய மன்ற பொருளாளர் சத்திய ராம் ராமுக்கண்ணு, ரோட்டரி மேனாள் ஆளுனர் சொக்கலிங்கம், ரெட்கிராஸ் சங்க கெளரவச் செயலாளர் ராஜா முகமது, ராஜா கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் ராஜா முகமது, மரம் நண்பர்கள் கண்ணன், மூர்த்தி, ரியாஷ் கான், விநாயகா மெடிக்கல்ஸ் குமார், ஆடிட்டர் உலகப்பன், ரோட்டரி, ஜேசிஐ உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிறைவாக பேக்கரி மகராஜ் நிறுவனங்கள் சார்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மரம் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் மற்றும் மரம் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.