வேலூர்:
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ரம்ஜான் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய நீதிக்கட்சி சார்பில் 2000 இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் கொண்டாடும் வகையில் பாஸ்மதி அரிசி 2 கிலோ, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மாசாலா பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, மண்டல பொறுப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட செயலாளர் (கிழக்கு) லோகநாதன், பாஜக (சிறுபான்மை பிரிவு) முகமது பாஷா ஆகியோர் தலைமை தாங்கினார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் தவீந்திரன் வரவேற்றார். விழாவில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்கள் கலந்துக்கொண்டு வாணியம்பாடி, ஆம்பூர் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் உட்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு ஏ.சி.சண்முகம் நேரில் சென்று வழங்கினார். ரம்ஜான் தொகுப்பை பெற்று மகிழ்ச்சியுடன் முஸ்லிம்கள் பெற்றுச் சென்றனர்.
பின்னர் ஏ.சி.சண்முகம் பேசுகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்காக மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளோம். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். மருத்துவ முகாம்கள் மூலம் மக்களும் பயனடைந்துள்ளனர்.
தொடர்ந்து, மருத்துவ முகாம், வேலை வாய்ப்பு முகாம் உள்பட மக்களுக்காக பல சேவைகளை செய்யவுள்ளோம் என பேசினார். இவ்விழாவில், இராம.இளங்கோவன், மாயா சிவா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் மூர்த்தி, இளஞ்செழியன், செதுக்கரை வெங்கடேசன், குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ், எஸ்.விஜியன், சி.வெங்கடேசன், வி.கே.பாலாஜி, டி.ஸ்ரீதர், பி.ரகுராமன், ஜி.எம்.பரமேஸ்வரன், என்.வெங்கடேசன், எஸ்.பிரபாகரன், கே.சரத்குமார், கே.ரஞ்சித்குமார், எம்.திலீப் குமார், பி.சரண்ராஜ், ஏ.தாஸ், எஸ்.சுரேஷ், பாராளுமன்ற இணைச் செயலாளர் பி.சங்கீதா, பரத் ரெட்டி, சுகன்யா ரெட்டி, ஏரிகுத்தி சங்கர், ஏ.விஜயன், சி.பழனி உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
அதேபோல, குடியாத்தம் சித்தூர் கேட் மற்றும் போஸ் பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ரம்ஜான் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர்.பி.செந்தில், தொகுதி பொறுப்பாளர் பாரத் மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட ஏசிஎஸ் பேரவை மாயா சிவா, மாநில தொண்டரணி செயலாளர் பட்டு பாபு, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மூர்த்தி, நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ்.ரமேஷ், ஏசிஎஸ் பேரவை சிவா, அம்பேத்கர் பேரவை நாகராஜ் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தலைமை அறங்காவலர் லலிதா லட்சுமி, ஏசிஎஸ் கல்விக் குழும தலைவர் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
வேலூர் – சசிகுமார்