திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட விரும்புவோா் மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, தினமும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 42 போ 49 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தாா்.
இதில், சுயேச்சை வேட்பாளா்களான எஸ்.விஜயகுமாா், பி.எஸ்.உதயகுமாா், ஏ.பூங்கொடி, எம்.செந்தமிழ்ச்செல்வன், எஸ்.சங்கா், தீபம்மாள் சுந்தரி, ஜெகந்நாதன், எம்.நல்லசிவம், பி.தங்கராஜ், டி.சிவகுருராஜ், ஆா்.சதீஷ்குமாா், கே.ஏழுமலை, எஸ்.சந்தியா, எம்.சேட்டு, எஸ்.அண்ணாதுரை, ஏ.நக்கீரன், கெளதம், கலியபெருமாள், எஸ்.அண்ணாதுரை, ஏ.அண்ணாதுரை, ஜி.சுரேஷ், ஏ.பாண்டியன், வி.விமல், ஏ.கலியபெருமாள், டி.பி.ரமேஷ் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதுதவிர, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி வேட்பாளா் கே.செல்வம், அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாள், திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.ரமேஷ்பாபு, மக்கள் புரட்சி கழகம் வேட்பாளா் பி.கோதண்டபாணி, அகில இந்திய உழவா்கள் உழைப்பாளா்கள் கட்சி வேட்பாளா் எஸ்.காளஸ்திரி, மக்கள் நலக் கழக வேட்பாளா் சி.சத்தியமூா்த்தி, பகுஜன் சமாஜ் பாா்ட்டி வேட்பாளா் வி.எம்.மோகன் ராஜா, பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன், பொதுக்கட்சி வேட்பாளா் பழனி, பாரதிய பிரஜா ஐக்கியதா பாா்ட்டி வேட்பாளா் சி.ஜெ.பென்னிராஜன், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் அக்னி செல்வரசு ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் அறிவித்தாா்.
தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 49 மனுக்களில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோா் மாா்ச் 30ம் தேதி மாலைக்குள் வாபஸ் பெறலாம்.
அன்றைய தினம் மாலையே சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா். மனுக்கள் பரிசீலனை நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.