மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டியில் அமைந்துள்ள செல்லப்பெருமாள் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு, செல்லம்பட்டி இளைஞர்கள் குழு சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 65 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன.
குரும்பை, சின்னக்கருப்பு, வெள்ளைமறை, கண் செவலை என பல்வேறு வகையான கிடாக்கள் இந்த போட்டியில் கலந்து
கொண்ட நிலையில், கிடாக்களின் வயது, பல் அடிப்படையில் நேருக்கு நேர் மோதவிட்டு அதிகபடியான எண்ணிக்கையில் மோதிக்கொள்ளும் கிடாக்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து கிடாக்களுக்கும், சிறிய மற்றும் பெரிய சில்வர் அண்டாகள் விழா கமிட்டியினரால் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியை, உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.