Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

உத்தப்புரம் கோவில்: பொதுமக்கள் வழிபாடு செய்வது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவிலை வழிபடுவதில் இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், கடந்த 2014ஆம் ஆண்டு கோவில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் இக்கோவிலை திறந்து வழிபாடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, 10 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறக்கப்பட்டு இரு சமுதாயத்தினரும் வழிபாடு செய்ய இரு சமுதாய மக்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். \

இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், நேரில் ஆய்வு செய்தார். கோவில் அமைந்துள்ள பகுதி, பிரச்சனைகள் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி., அரவிந்த், மீண்டும் வழிபாடு செய்யும் போது, அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், இரு சமுதாய மக்களும் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து, உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினரிடம் கேட்டறிந்தார்.
விரைவில் இக்கோவிலில் பொதுமக்கள் வழிபாடுசெய்ய வேண்டிய ஏற்பாடுகளை, வருவாய்த்துறை, காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top