மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வருவாய் துறை மற்றும் காவல் துறை சார்பாக, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாய்மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். காவல் உதவி ஆய்வாளர் பழனி, கல்லூரி முதல்வர் சாவித்திரி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜெகதீசன் வரவேற்றார். நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் ராமர் உறுதிமொழி வாசித்தார்.
இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். முடிவில், நிர்வாக அதிகாரி முருகேசன் நன்றி கூறினார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். காவல் உதவி ஆய்வாளர்கள் உதயகுமார், (பயிற்சி) உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார்.
கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உறுதிமொழி வாசித்தார். இதில், ஏட்டு அனுராதா, ஆசிரியர் பாலமுருகன் உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நல பணி திட்ட திட்ட அலுவலர் நரேந்திரா நன்றி கூறினார்.