நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, உசிலம்பட்டி அருகே சேடபட்டி குறுவட்ட அளவையராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
இவரிடம், சின்னகட்டளைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி தனது நிலத்தை அளவீடு செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்த சூழலில், நில அளவையரான ஜோதி கடந்த 6ஆம் தேதி அளவீடு செய்து விட்டு அளவீடு செய்ததற்கான சான்று வழங்க ரூபாய் 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டு நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் ராமசாமி புகார் அளித்த சூழலில், ராமசாமியிடம் ரசாயணம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், சேடபட்டி பேருந்து நிறுத்ததில் விவசாயி ராமசாமியிடமிருந்து, நில அளவையர் ஜோதி ரசாயணம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் ஜோதியை, கையும் களவுமாக
கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
