Close
நவம்பர் 2, 2024 10:23 காலை

தமிழகத்தில் ரயில் சேவையில் மாற்றம்: பல ரயில்கள் பகுதியாக ரத்து

திண்டுக்கல் ரயில்வே யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே குறிப்பிட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

ஈரோட்டில் இருந்து 14.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16845 ஈரோடு செங்கோட்டை ரயில், 07.10.2024 அன்று திண்டுக்கல் – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; அன்று திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படாது.

ரயில் எண்.16846 செங்கோட்டை -ஈரோடு ரயில், செங்கோட்டையிலிருந்து 05.00 மணிக்குப் புறப்படும், 08.10.2024 அன்று செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் இயக்கப்படாது; அன்று திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும்.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

ரயில் எண்.16321 நாகர்கோவில்- கோயம்புத்தூர் ரயில், நாகர்கோவிலில் இருந்து 07.50 மணிக்கு புறப்படும், 08.10.2024 அன்று விருதுநகர் – கரூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும்.

இதன் விளைவாக நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் – கரூர் இடையே மாற்றுப்பாதையில் 08.10.2024 அன்று இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும். இதனால், 08.10.2024 அன்று திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல் ஜே.என்., எரியோடு மற்றும் பாளையம் ஆகிய இடங்களில் ஸ்டாப்பிங் கிடையாது.

ரயில் எண். 16322 கோயம்புத்தூர்-நாகர்கோவில் ரயில், 08.10.2024 அன்று கரூர்- விருதுநகர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும். இதனால், 08.10.2024 அன்று பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை ஜே.என்., திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் ஸ்டாப்பிங் கிடையாது.

ஈரோட்டில் இருந்து 14.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16845 ஈரோடு- செங்கோட்டை ரயில், 09.10.2024 அன்று திண்டுக்கல் -செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; அன்று திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படாது.

ரயில் எண்.16846 செங்கோட்டை – ஈரோடு ரயில், செங்கோட்டையிலிருந்து 05.00 மணிக்குப் புறப்படும், 10.10.2024 அன்று செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் இயக்கப்படாது; அன்று திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் ரயில், 10.10.2024 அன்று விருதுநகர் – கரூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும். இதனால், 10.10.2024 அன்று திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துறை, திண்டுக்கல் ஜே.என்., எரியோடு மற்றும் பாளையம் ஆகிய இடங்களில் ரயில் ஸ்டாப்பிங் கிடையாது.

ரயில் எண். 16322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் ரயில், கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து 08.00 மணிக்குப் புறப்படும், 10.10.2024 அன்று கரூர் விருதுநகர் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும். இதனால், பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை ஜே.என்., திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய இடங்களில் ரயில் ஸ்டாப்பிங் கிடையாது.

இத் தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top