தமிழ்நாட்டின் மாநில மரமாக கருதப்படும் பனை மரம், மண் அரிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது மட்டுமல்லாது அதன் நீண்ட வேர்கள் வாயிலாக தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
மேலும் வெள்ளம் போன்ற கடும் மழைக் காலங்களில் ஆற்றங்கரையோரங்களில் சேதங்கள் ஏற்படாமல் பனைமரம் நம்மை காக்கும் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளைச் சுற்றி இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் பனை விதைகள் நடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பனை விதைகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பனை விதைகள் நடும் விழா தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில், விவசாயிகள் வழங்கிய பனை விதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பழனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நட்டு வைத்தார்.
அப்போதுகூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.