Close
நவம்பர் 22, 2024 7:53 காலை

உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை மீட்ட வனத்துறையினர்

உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய புள்ளிமானை, வனத்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூர் – வடகரைப்பட்டியில் உள்ள சாப்டூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து தண்ணீரில் நீந்தியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்ட சாப்டூர் கிராம இளைஞர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்துவந்த சாப்டூர் வனச்சரக வன அலுவலர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் புள்ளிமானை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
இந்த புள்ளிமான் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் என்றும், வனப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக தரைபகுதிக்கு இரை தேடி வரும் போது நாய்கள் துரத்தி இருக்கலாம் என்றும், அதனாலேயே கிணற்றில் தவறி விழுந்திருக்
கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மீட்கப்பட்ட இந்த புள்ளிமானை வனத்துறையினர் அருகில் உள்ளசதுரகிரி வனப்பகுதியில் விடுவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top