Close
நவம்பர் 14, 2024 5:08 மணி

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட பயனாளிகள் கணக்கெடுப்பில் விவரங்கள் என்ன?

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டது.
இதற்காக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் குடியிருப்புகள் மற்றும் அரசு நிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி சுமார் 4800 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது.
இதற்கான நிலை எடுப்பு பணிகளுக்காக மூன்று மண்டல அலுவலகங்கள் சிறப்பு மண்டல வருவாய் அலுவலர் நில எடுப்பிற்காக நியமிக்கப்பட்டார். இதற்காக வட்டாட்சியர்கள் நில அளவையர்கள் பொதுப்பணித்துறை ஊழியர்கள் என பல துறைகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
இவர்கள் இதில் இணைக்கப்பட உள்ள கிராமங்களில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு பணிகளை துவங்கினர்.

இதற்கு முன்பாக அந்தந்த கிராமங்களில் எடுக்கப்படும் நிலங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி அதன் உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கிராமங்களில் சிறப்புக்கு குழுவினர் கடந்த ஒரு வாரமாகவே பணிகளை துவக்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேற்று தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தில் கணக்கெடுக்கும் குழு கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என ஊரில் ஆர்ப்பாட்டம் செய்த நபர்களை கைது செய்து அதன் பின் விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் இக்குழு எந்த மாதிரி கணக்கெடுப்பை நடத்துகிறது என்பதை குறித்த தகவல்களை நில எடுப்பு குழுவினர்கள் தெரிவித்தனர்.

அதன்படி :
1. நிலம் அல்லது குடியிருப்பு பகுதிகளை தரும் நபரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரங்கள்.
2. குடும்ப உறுப்பினர்களின் மூத்த குடிமக்களின் விவரங்கள் தனியாக பதிவு செய்யப்படுகிறது.
3. மேலும் அக்குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் அதன் வருமானங்கள் குறித்த விவரம்.
4. குடும்ப உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி விவரங்கள்.
5. மேலும் குடியிருக்கும் வீட்டில் வசதிகள் விவரம், குடியிருப்பின் அளவு, அதற்கான ஆதாரம், ரேஷன் கார்டு, ஆதார் விவரங்கள்.
6. வீட்டில் உள்ள மரங்கள், பழவகை மரம், கிணறு உள்ளிட்டவைகளின் பதிவேற்றப்படுகிறது.
7. குடியிருப்பு வீட்டின் அளவுகளை பொதுப்பணித்துறையினர் அளவீட்டு பதிவு செய்கின்றனர்.

இதுபோன்ற விவரங்கள் அனைத்தும் அவர்களது நல திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அதற்கான செயல் திட்டங்களும் தீட்ட இந்த விவரங்கள் பயன்படும் என நில எடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top