இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்பு மற்றும் அனைத்து துறை சிறப்பு குழுவினர் வீடுகள், சொத்துகள் விவரம் என கணக்கெடுத்து வருகின்றனர்
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கான கணக்கெடுப்பு நெல்வாய் கிராமத்தில் வசிக்கும் நபர்கள் வீடு மட்டும் அவர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ளடக்கி சுமார் 4800 ஏத்த பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது.
இதற்காக நிலம் கையகப்படுத்த தனி மாவட்ட வருவாய் அலுவலர் நிலையெடுப்பு நிலையில் 3 அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வட்டாட்சியர்கள் சர்வேயர் பொதுப்பணி துறை என அனைத்து பணியாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமில்லாமல் நில எடுப்பு குறித்த அறிவிப்பும் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு அதற்கான ஆட்சேபனை கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தில் அமைந்துள்ள வீடுகள் மரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் உள்ளிட்டவை ஆதார் எண்ணுடன் செயல் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நேற்று தொடங்கிய நாளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளின் அளவுகள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் அளவீடுக்கப்பட்டும், பல்வேறு நிலை பணியாளர்கள் மூலம் வருவாய்த்துறை இணைந்து செயலிகளில் வீடுகளில் வசிக்கும் நபர், கல்வி நிலை மற்றும் அவர்களது தொழில் வருமானம் உள்ளிட்டவைகளும் பதிவு செய்யப்படுகிறது.
கிராமங்களில் திடீரென அலுவலர்கள் குவிந்து கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் இதனை எவ்விதத்திலும் தடுக்க இயலாத நிலையில் பொதுமக்கள் கண்ணீருடனே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து பதிவு செய்து வருகின்றனர்.