Close
நவம்பர் 21, 2024 4:47 மணி

வேலூர் மத்திய சிறையில் 11 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம்

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமாரை, அப்போதைய வேலூர் சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும், அப்போது சிறைத்துறை டிஐஜி வீட்டில் அவர் திருட்டில் ஈடுபட்டதாக கூறி சிறையில் வைத்து 90 நாட்கள் தாக்கப்பட்டு, கொடுமை படுத்தப்பட்டதாக சிவகுமாரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனை அடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறை துறைடிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏற்க்கனவே இவ்வழக்கு தொடர்பாக வேலூர் சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி, எஸ்பி., அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மத்திய சிறை காவலர்களான ராஜு, ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறை காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 பேரை பணியிட நீக்கம் செய்யது சிறைத் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top