Close
டிசம்பர் 3, 2024 5:54 மணி

திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டி

போட்டியை டாஸ் போட்டு துவக்கி வைத்த ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்

திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் அமெச்சூர்  கபடி கழகம் சார்பில் 50 ஆவது மாநில இளையோர் பெண்கள் கபடி போட்டியை நடத்தியது.

இப்போட்டி  வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.  முதல் போட்டியாக திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியை ,திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.

முதல் போட்டியில் சிவகங்கை விழுத்தி திருவண்ணாமலை அணி அபார வெற்றி பெற்றது.  திருவண்ணாமலை அணி 40 புள்ளிகளும் சிவகங்கை அணி 13 புள்ளிகளும் பெற்றன.  இந்த போட்டி பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க 38 மாவட்டங்களில் இருந்து 456 வீராங்கனைகள் வந்திருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கபடி கழக தலைவர் வெங்கடாஜலபதி, தமிழ்நாடு அமெச்சூர்  கபடி கழக சேர்மன் பாண்டியன், பொருளாளர் சண்முகம், பொதுச்செயலாளர் சபியுல்லா மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top