Close
நவம்பர் 23, 2024 9:52 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

புதிய வகுப்பறையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மாஷார் ஊராட்சியில் இரண்டு வகுப்பறைகளும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேடநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜன் தாங்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ,சொர குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சு வாள வெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,  மற்றும் துரிஞ்சாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ் வி நகரம் அரசு மேல்நிலைப்பள்ளி,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் வெம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ,கொற்கை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, அனக்காவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆகிய பகுதிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அந்தந்த பகுதியில் நடைபெற்ற விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய வகுப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஆரம்பித்து வைத்தனர்.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். அப்போது அவர் பேசுகையில்,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மூன்று ஆண்டுகால நல்லாட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சாட்சி தான் இன்று திறக்கப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்கள்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் 100% தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை அமைச்சர் வேலுவும், நானும், மாவட்ட ஆட்சியரும் மேற்கொண்டு வருகிறோம் பணக்காரர்கள் ஏழையாகி விடுவார்கள் ஆனால் கல்வியை யாரும் பறிக்க முடியாது .அதுதான் எதிர்காலம் என துணை சபாநாயகர் பேசினார்.

ஆரணி

ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடியே 27 லட்சத்தில் ஆறு புதிய வகுப்பறைகளை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பில் கவனம் கொண்டு நன்றாக படிக்க வேண்டும் மாணவர்களின் நலனுக்காகவே தமிழக அரசு தமிழ் புதல்வன் திட்டம் விலையில்லா மிதிவண்டி என பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் ரூபாய் 43 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கட்டிடங்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குத்துவிளக்கேற்றி தூக்கி வைத்தார் . அப்போது அவர் பேசுகையில்

மாணவர்கள் சிறந்த முறையில் படித்து தமிழக அரசு வழங்கும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்லூரியிலும் பள்ளியிலும் விளையாட்டுகளிலும் சிறந்த மாணவர்களாகவும் நமது ஊருக்கும் நமது ஆசிரியர்களுக்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செய்யாறு

செய்யாறு தொகுதி கொற்கை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  புதிய பள்ளி கட்டிடங்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் நன்கு படித்து நமது தொகுதிக்கும் நமது மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், ஆரணி நகர மன்ற தலைவர் மணி, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் , உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top