Close
நவம்பர் 14, 2024 5:41 காலை

தாமரைப்பாக்கம் அருகே நியாய விலை கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா: எம் எல் ஏ. கிருஷ்ணசாமி பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எம் எல் ஏ. கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த திட்டத்திற்காக பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி2024-25 ஆண்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை, மற்றும் ஆயிலச்சேரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் பணிகள் தொடங்கப்பட்தது.
கட்டிட பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இரண்டு கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முரளி, ஆயிலச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முனிவேல் ஆகியோர் தலைமை வகித்தார்.
எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், பொறியாளர் நரசிம்மன், ஒன்றிய குழு உறுப்பினர் தனலட்சுமி முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி பங்கேற்று இரண்டு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கன்னிகாபுரம் முதல் ஆயிலச்சேரி வரை ரூபாய் 8.கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் வாழும் மக்கள் நீண்ட வருடங்களாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர் மக்களின் கோரிக்கை ஏற்று இரண்டு பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் எந்த ஒரு திட்டங்களை அவர் முழுமையாக நிறைவேற்றியதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சாலை வசதிகளும், ஏழை பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000, பெண்களுக்கு ரூ.1000, என சொல்லிக்கொண்டே போகலாம்
இந்த ஆட்சியில் மட்டும்தான் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க பெற்றுள்ளது என்று அவர் பேசினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் லோகநாதன், அன்பு, பாஸ்கர், சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆஷா சுரேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆயிலசேரி ஊராட்சி செயலர் குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top