Close
நவம்பர் 23, 2024 8:11 காலை

பழங்குடி ஜாதி சான்று கேட்டு மாணவ,மாணவிகளுடன் பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம்..!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கன் மக்கள்

சோழவந்தான்:

மதுரை,பரவை அருகே, சாதி சான்றிதழ் கேட்டு மூன்றாவது நாளாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுக்கே செல்லப்போவதாககூறி பெற்றோர்கள் தொடர் போராட்டம் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்குட்பட்ட இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டு
நாயக்கன் எனும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு மூன்றாவது நாளாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுக்கே செல்லப்போவதாககூறி பெற்றோர்கள் தொடர் போராட்டம் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கடந்த ஆண்டு வரை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பல்வேறு காரணங்களை கூறி, மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு இந்து காட்டுநாயக்கன் என்ற சான்றிதழ் தர மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இந்து காட்டுநாயக்கன் சான்றிதழ் எனும் (ST) பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்றுமுன்தினம் முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுக்கே செல்லப்போவதாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சத்தியமூர்த்தி நகர் கிராம மந்தையில் தங்களது குழந்தைகளுடன் கூடியுள்ள 500க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் இன மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் தங்கள் குழந்தைகளை வேட்டையாடும் பயிற்சி வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என, தெரிவித்துள்ளனர் . இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பல்வேறு காரணங்களை கூறி மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு இந்து காட்டு நாயக்கன் என்ற சான்றிதழ் தர மறுப்பதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top