வாடிப்பட்டி:
மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க சார்பாக வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கட்சி அலுவ லகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் பால ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் மு.பால்பாண்டியன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், சோழவந்தான் தொகுதி மேலிட பார்வையாளர் நாகினி செந்தில்குமார் வருகிற 16, 17 மற்றும் 23,24 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்களை சேர்த்தல்,நீீக்கல் பணிகளை வாக்குச் சாவடி பாக முகவர்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறி ஆலோசனை வழங்கி பேசினார்.
இதில், பேரூர் மற்றும் ஒன்றிய வாக்குச்சாவடி பாக முகவர்கள், கட்சி நிர்வாகிகள் ராம் மோகன்,ராஜசேகர், எம்.எஸ். முரளி, அரவிந்தன், வினோத், முருகன் உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் நன்றி கூறினார்.