நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெங்காய விலை கிலோவுக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மும்பை வியாபாரி ஒருவர் கூறுகையில், பணவீக்கத்தால், வெங்காய விலையும் கூடிவிட்டது. கிலோவுக்கு, 60 ரூபாயிலிருந்து ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. ஆனால், மற்ற காய்கறிகள் விலை நிலையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்கிறார்கள் என்றார்.
வெங்காயம் உணவில் சேர்த்து பழக்கமாகி விட்டதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வெங்காயத்தோடு பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும்.
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வால் மற்ற காய்கறி விலையும் கூடியிருப்பதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் குறைந்தபட்ச விலை 40 ரூபாய் ஆகவும் அதிகபட்ச விலை 75 ரூபாய் ஆகும் உள்ளது குறிப்பிடத்தக்கது.