Close
நவம்பர் 13, 2024 12:58 காலை

கலெக்டரின் எச்சரிக்கையை மதிக்காத திருநங்கைகள், அதிர்ச்சியில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள்

கைது செய்யப்பட்ட திருநங்கைகள்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம்.

இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பௌர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம்.

குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் வார விடுமுறை நாட்களில் திருவண்ணாமலை வருகை தந்து கோவிலில் தரிசனம் செய்த பின் கிரிவலம் வருகின்றனர்.

இந்நிலையில், கிரிவலம் வரும் பக்தர்களிடம் குறிப்பிட்ட சில பகுதிகளில் திருநங்ககைள் குழுக்களாக நின்று இடையூறு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஏராளமான புகார்கள் குவிந்தன.

அதிலும் குறிப்பாக ராஜகோபுரம் முன்பு, அக்னி லிங்கம் பகுதி மற்றும் அரசு கலைக் கல்லூரி பகுதி, கிரிவலப் பாதையில் சில இடங்களிலும் திருநங்கைகளின் அட்டகாசம் மிக அதிகமாக இருப்பதாக பக்தர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்திருந்தனர் .

காசு கொடுக்காத பக்தர்களை தரக்குறைவாக பேசுவது தனியாக வரும் பக்தர்களை மிரட்டுவது சில நேரங்களில் அவர்களை அடிப்பது அவர்களிடத்தில் இருக்கும் பொருட்களை பறித்துக் கொண்டு செல்வது என பல குற்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால், கிரிவலம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்வதாக கூறுகின்றனர்.

கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரடியாக கோவில் முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த திருநங்கைகளை எச்சரித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என உத்தரவு பிறப்பித்து திருநங்கைகளை எச்சரித்து இருந்தார்.

ஆட்சியரின் எச்சரிக்கையை மதிக்காத திருநங்கைகள்

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை அடுத்து சில நாட்கள் திருநங்கைகள் அங்கு வராமலும் கிரிவலப் பாதையில் வராமலும் அமைதியாக இருந்தனர். பக்தர்களும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு  நன்றி தெரிவித்து மகிழ்ந்து நிம்மதியாக கிரிவலம் வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு புதுமண தம்பதியை திருநங்கைகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் இருந்து மாலையுடன் வந்த புதுமண தம்பதியை எலுமிச்சை பழம் கொண்டு திருஷ்டி சுற்றிய திருநங்கைகள் ரூ.1000 கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்காததால் அந்த தம்பதியை திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினரைசாரைக்கூட அவர்கள் பொருட்படுத்தாமல் தம்பதியை தாக்கியுள்ளனர். மேலும் போலீசாரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து புதுமண தம்பதியினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். புதுமணத் தம்பதியினரை 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடி தாக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை அதிரடி

தம்பதியர்களை அச்சுறுத்தி அவர்களை தாக்கியதாக கூறி மாயா ஸ்ரீ, தனுஷ்கா, ரீனா என்ற மூன்று திருநங்கைகள் மீது திருவண்ணாமலை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவர்களை சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து போலீசார் கிரிவலப் பாதை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top