திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஹைபிரிட் லேர்னிங் வகுப்பறையினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.
மைக்ரோசாப்ட், மற்றும் டெக் அவெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 766 மாவட்டங்களில் 840 பள்ளிகளை தேர்வு செய்ததில் திருவண்ணாமலையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இப்பள்ளியில் ஹைபிரிட் லேர்னிங் வகுப்பறை புதியதாக ஏற்படுத்தப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் அனிதா ராம் குருபூஜை செய்து வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு புதிய ஹைடெக் வகுப்பறையினை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கல்வியின் சிறப்பு எதிர்கால மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடத்தில் கலந்துரையாடினார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எழுதிய அன்புள்ள ஆசிரியர்களுக்கு என்ற புத்தகத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெகதீசன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் ஹைபிரிட் லேர்னிங் திட்ட அலுவலர் கீதாம்பரி நன்றியுரை வழங்கினார்.