Close
நவம்பர் 21, 2024 1:33 மணி

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆஷா அஜித் அழைப்பு..!

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01.01.2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக நேரடியாகவோ அல்லது https://elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது Voters Helpline செயலிp/https://voters.eci.gov.in மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 28.11.2024 வரை சிவகங்கை/தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல, நீக்கம்செய்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top