Close
டிசம்பர் 3, 2024 5:03 மணி

அண்ணாமலையார் திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: பார்க்கிங் வசதி செய்து தர கோரிக்கை

மாட வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலை நகரத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு உடனடியாக வாகனம் நிறுத்த இடம் தேவை என பக்தர்கள் வலியுறுத்தினர்.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலைய ார்  திருக்கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை  முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேபோல் விடுமுறை தினம் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையொட்டி நேற்றும் அதிகளவில் பக்தர்கள் வந்தனர்.

குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. அதன்படி, அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ரூ. 50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசன வரிசை வெளிப்பிரகாரம் வரை நீண்டிருந்தது. எனவே, தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகனம் நிறுத்த இடம் தேவை

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசல் நகரின் பல பகுதிகளில் காணப்பட்டது. மாட வீதி, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கார், வேன்கள் அனுமதிக்கப்படவில்லை.

பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் இடமில்லாததால் பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் மதில் சுவர் மாட வீதிகளில் உள்ள சாலை ஓரங்களிலும் வாகனத்தை நிறுத்தி சென்று விடுகின்றனர்.

பலர் தங்களது வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல் இடம் தேடி மாடவீதி ஒட்டி உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் அங்கு குடியிருப்பவர்கள் வெளியில் வர முடியாமலும் தங்களது வாகனங்களை எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்தை சீரமைப்பது போலீசாருக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,

சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகிறோம். வாகனங்களை நிறுத்த பார்க்கிங் மையம் இல்லாததால் இடம் தேடி அலைந்து சாலையோர பகுதிகளில் காரை நிறுத்தி சாமி தரிசனம் செய்கிறோம்.

இதனால் அங்கு இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகிறது. சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆகிறது என்றால் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் அதை விட கூடுதலாக ஆகிறது.

எனவே அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனத்தை நிறுத்த பார்க்கிங் ஸ்பாட் அமைத்து கொடுத்தல் மற்றும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு என உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top