Close
டிசம்பர் 3, 2024 5:20 மணி

மதுரையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…!

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய தற்காலிக ஆசிரியர்கள்.

மதுரை:

மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில், 2011-12ம் ஆண்டு முதல் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 363 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் விதமாக, ரூ. 12,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந. செந்தில்குமார், மா. சாமூண்டிஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பணி நிரந்தரம் செய்வேன் என்று சொன்ன வாக்குறுதியை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top