Close
டிசம்பர் 3, 2024 5:10 மணி

ஐப்பசி பௌர்ணமி : மதுரை கோயில்களில் 15ம் தேதி அன்னாபிஷேகம்..!

அன்னாபிஷேகம் -கோப்பு படம்

மதுரை:

மதுரை மாவட்ட கோயில்களில், இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும், ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை மாவட்டத்தில் கோயில்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதை ஒட்டி, சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறும்.

தொடர்ந்து, சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதை அடுத்து, அர்ச்சனை செய்யப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். இரவு, சிவன் மீது செய்யப்பட்ட அன்னாபிஷேகத்தை, கோயில் சிவாச்சாரியார்கள் தட்டில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அதேபோல, மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் சிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதே போல, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்,

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில், பழைய சொக்கநாதன் திருக்கோயில், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் ஆலயம்,மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம் , மதுரை ரிங் ரோடு ஜே. ஜே. நகர், விநாயகர் ஆலயம் ஆகிய கோள்களில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, அன்னா பிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கலை மூலநாதர் சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களிலும் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு, சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top