காஞ்சிபுரம் பகுதிகளில் அரசு மதுபான கடை செவிலிமேடு , ஜெம் நகர், பெரிய காஞ்சிபுரம், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகில் இருந்த அரசு மதுபான கடை பொதுமக்களின் தொடர் புகார் காரணமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜெம் நகர் உள்ளிட்ட பல்வேறு புதிய குடியிருப்பு பகுதிகள் அதிகமாகி கொண்டு வருகிறது.
புதிய குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான ஒரு தொழிற்சாலை மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரிந்து பெறுவதும் அப்பகுதியை சிறந்த குடியிருப்பு பகுதியாக தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெம் நகர் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதால், கடை துவங்கும் முன்பே அந்த சாலையில் அதிக அளவில் மது பிரியர்கள் குவிந்து வருவதும் நள்ளிரவு பத்து மணி வரை சாலையில் அமர்ந்து குடிப்பதும் , வீட்டின் முன்பு சிறுநீர் மற்றும் மது பாட்டில்களை வீசி செல்வது என பல பிரச்சினைகளை குடியிருப்புவாசிகள் சந்திப்பதும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதும் தொடர் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் குடியிருக்கும் பெண் ஒருவர் தங்கள் பகுதி டாஸ்மாக் செயல்படுவதால் ஏற்படும் நிலைமைகளை வீடியோ பதிவு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை செய்துள்ளார்.
இந்நிலையில் இதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மேலாளருக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது இதுகுறித்து காவல்துறை அறிக்கை தர ஆட்சியர் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காவல்துறைக்கு அப்பகுதியில் டாஸ்மாக் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கும் பிரச்சனை ஏற்படும் என காவல்துறை தனி பிரிவு இது குறித்து அறிக்கை காவல்துறைக்கு அளித்துள்ளது.
அனைத்து தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட ஆட்சியர் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்வாரா ? என்ற கேள்விக்கு பதில் ஆவலுடன் அப்பகுதி குடியிருப்பார்கள் எதிர்பார்த்து உள்ளனர்.