Close
நவம்பர் 24, 2024 2:09 காலை

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு..!

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 இன் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ளக புகார் குழு ஏற்படுத்தப்பட வேண்டும். இக்குழு குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்க வேண்டும்.

அவற்றில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இச்சட்டத்தின்கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார் பெட்டி ஒன்றை அமைக்கவேண்டும்.

புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களைக் கொண்டு உள்ளூர் புகார் குழுவில் பதிவுசெய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒருமுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அறிக்கையாக ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்திர அறிக்கையாக வழங்கப்பட வேண்டும்.

உள்ளக புகார்குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும். இப்புகார் ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.50ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகளர் குழு ஏற்படுத்துமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top