திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பாக 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு களப்பணிக்கான 2ம் கட்ட பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் துவக்கி வைத்தார்.
வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்திடவும், அவற்றை மதிப்பீடு செய்யவும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் அங்கமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வகுத்துள்ள நெறிமுறைகளின்படியும், இ ந் தி ய அ ர சி ன் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு 11-வது வேளாண்மைக் கணக்கெடுப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது.
தற்போது, அதில் முதல் கட்ட பணிகள் முடிந்து, 2ம் கட்ட களப்பணிக்கான கணினி வழி பயிற்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இப்பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையேற்று துவக்கி வைத்து இத்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 11-வது வேளாண்மை கணக்கெடுப்பின் களப்பணியாளர்களான கிராம நி ர்வாக அலுவலர்களுக்கும் மேற்பார்வையாளர்களான வருவாய் ஆய்வாளர்களுக்கும் செய்யாறு கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் சக்திவேல் பயிற்சி வழங்கினார்.
இப்பயிற்சியில் திருவண்ணாமலை கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் ஏழுமலை, புள்ளியியல் அலுவலர்கள் சரவணன், இராமமூர்த்தி மற்றும் அனைத்து புள்ளியியல் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.