திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.51.02 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.4.42 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை பக்தா்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். மேலும், நிறைவுற்ற பல்வேறு பணிகளையும் அவா் திறந்து வைத்தாா்.
அடிக்கல் நாட்டிய திட்டங்கள்..
திருவண்ணாமலையில் ரூ.44.57 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள், தண்டராம்பட்டை அடுத்த வானாபுரம் ஊராட்சியில் ரூ.5.40 கோடியில் பிள்ளையாா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி, திருவண்ணாமலை, நந்தவனக் கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.1.07 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டுதல்,
அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள் விமானங்கள் ரூ.5 கோடியில் வண்ண மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகள் , உண்ணாமுலை அம்மன் தீா்த்தம், நிருதி தீா்த்தம், சனி தீா்த்தம், கிருஷ்ணா் தீா்த்தம், சூரிய தீா்த்தம், பழனியாண்டவா் தீா்த்தம், வருண தீா்த்தம் ஆகிய 7 தீா்த்தக் குளங்களை ரூ.2.57 கோடியில் சீரமைத்தல் பணி, ரூ.57 லட்சத்தில் குபேர லிங்கத்துக்கு அருகில் வணிக வளாகம்கட்டும்பணி ,என மொத்தம் ரூ.51.02 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இந்தவிழாவையொட்டி திருவ ண்ணாமலை கிரிவல பாதையிலுள்ள அ ருணகிரிநாதர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சிய ர் பாஸ்கரபாண்டியன், அண்ணாதுரை எம்.பி, கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர்குழு தலைவர் ஜீவானந்தம், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில், துணைமேயர் ராஜாங்கம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சி சுந்தரம், டிவிஎஸ்.ராஜாராம், கோமதிகுணசேகரன், சினம் இராம.பெருமாள், அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை தலைவர் சின்ராஜ் செயலாளர் அமரேசன், பொருளாளர் தனுசு, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், அண்ணாமலையார் கோவில் மேலாளர் செந்தில் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.