சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, தனது தாயாருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கவில்லை என அவரது மகன் மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசு மற்றும் மருத்துவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்புகள் அளிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தது.
மேலும் இன்று தமிழக முழுவதும் புற நோயாளிகளுக்கான சேவை பிரிவை புறக்கணிப்பதாகவும், அவசர சிகிச்சைகள் மற்றும் உள் நோயாளிகளின் சேவையை ஈடுபட உள்ளதாக மருத்துவ சங்கங்கள் அறிவித்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலை 8 மணி முதல் புற நோயாளிகள் பிரிவில் ஏராளமான நோயாளிகள் காத்திருக்கும் நிலையில் மருத்துவர்கள் சேவையினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் உள் நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு நுழைவு வாயிலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதியம் 12 மணியளவில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்