Close
டிசம்பர் 3, 2024 5:26 மணி

‘வான் கனவு மெய்ப்படும்’ பயிற்சி முடித்த மகளிருக்கு நவீன தையல் இயந்திரங்கள்..!

ஓராண்டு தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ் மற்றும் நவீன தையல் இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாராஜன்.

மதுரை:
”வான் கனவு மெய்ப்படும்”தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த  மகளிருக்கு நவீன தையல் இயந்திரங்களை  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்  வழங்கினார்.
மதுரை மாநகராட்சி மகபூப்பாளையத்தில் உள்ள வான் கனவு மெய்ப்படும்  அமைப்பின் கீழ் உருவான ஒருங்கிணைந்த தையற்கூடத்தில்  ஓராண்டு தையல்
தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த மகளிருக்கு நவீன தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்   வழங்கினார்.
இந்நிகழ்வில்,  மேயர்  இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர், உருவாக்கிய வான் கனவு மெய்ப்படும்  அமைப்பின் கீழ்  மருத்துவ உதவியாளர் பயிற்சி மையம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் மற்றும் ஒருங்கிணைந்த தையற் தொழிற்கூடம் ஆகிய பயிற்சிகள் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் உள்ளடக்கிய தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது.
பெண்கள் தாங்களே ஒரு தொழிலைத் தொடங்கவும் தொழிலை வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் சமூகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க உதவிட முடியும் என்பதை ஒரு நோக்கமாக
கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஒருங்கிணைந்த தையற் கூடத்தில் ஓராண்டு தையல் தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த            11 மகளிருக்கு தனித்து தையல் தொழில் செய்வதற்கு ஏதுவாக தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ்  நவீன தையல் இயந்திரங்களை   அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக மண்டலம் 3 வார்டு எண்.55 கீழ அண்ணாத்தோப்பு வைகை வடகரை பகுதியில்  மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகள், வார்டு எண்.55 அண்ணா தோப்பு வைகை தென்கரை அணுகுசாலையில் ரூ.4.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டியை  அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத் தலைவர் திருமதி. பாண்டிச் செல்வி, ராஜ்மகால் பட்டு நிறுவன உரிமையாளர்  சிவப்பிரியா, நகர்நல அலுவலர் மரு.இந்திரா. உதவி ஆணையாளர் பிரபாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயா, மகாலெட்சுமி,  தொழில் முனைவோர் பயிற்சி மகளிர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top