Close
நவம்பர் 14, 2024 9:06 மணி

சென்னை மருத்துவர் கத்தி குத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மருத்துவர்கள் போராட்டம்..!

மதுரை அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தியதில் மருத்துவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அனைத்து
அரசு டாக்டர்கள் சங்கத்தினர் மதுரை அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கோஷம் எழுப்பினர். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top