Close
நவம்பர் 15, 2024 4:34 காலை

நாற்று நட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்..!

நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் ஆகியோர் இணைந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமை வகித்து, ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உழவு கருவி பொருட்களான பவர் டில்லர் மற்றும் டிராக்டரை மானிய விலையில் பெற வேண்டி ஆன்லைனில் விவசாயிகள் விண்ணப்பித்து தனியார் பவர் டில்லர் விநியோக நிறுவனம் வாயிலாக பதிவு செய்யப்படும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் படுவதாகவும்.

மேலும் கடந்த ஒரே ஆண்டில் 48 ஆயிரம் ரூபாய் வரை பவர் டில்லர் விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் 30ஆயிரம் ஏக்கருக்கு 100 மூட்டை நெல் கூட உற்பத்தி இல்லை உரத்தட்டுப்பாட்டை போக்கி விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆரணி, மேற்கு ஆரணி வேளாண் விரிவாக்க மையங்களில் தட்டுப்பாடின்றி விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், ஆரணி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்

வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம் முன்பு விளைந்த நெற்கதிரை சேற்றில் விதை நெல்லாக நடவு செய்து நூதன முறையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைதலைவர் சதுப்பேரி மூர்த்தி, குணாநிதி,ஒன்றியச் செயலா்கள் ரமேஷ், குப்பன், மற்றும் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top