Close
நவம்பர் 15, 2024 6:30 காலை

திருவண்ணாமலையில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்கம்

மரக்கன்றுகளை நட்டு விழாவி னை துவக்கிவைத்த மண்டல இணைப்பதிவாளர்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூட்டுறவு துறை சார்பில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தொடக்கத்தையொட்டி அரசின் புதிய செயல்திறன்மிகு திட்டங்களின் மூலம் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்க கொடியேற்று விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜெயம் துணைப்பதிவாளர்கள் ராஜசேகரன், துரைராஜ், கோவிந்தராஜூலு ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்தனா். விற்பனை சங்க செயலாட்சியா் ச.சந்தியா வரவேற்றாா்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இணைப்பதிவாளர் பார்த்திபன் சங்க கொடியினை ஏற்றிவைத்து கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கிவைத்தார்.

இந்த விழாவையொட்டி கூட்டுறவு துறை அலுவலர்கள் பணியாளா்கள் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியேற்றனர்.

 விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் மீனாட்சிசுந்தரம், சுரேஷ்குமார், வேல்முருகன், மூர்த்தி, தீபன்சக்கரவர்த்தி, கல்யாணகுமார் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா ஒருவாரம் கொண்டாடப்படவுள்ளது. முடிவில் சங்க செயலாளர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சங்கக் கொடியை செயலா் வேலுமணி ஏற்றிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பணியாளா்கள் மனோகரன், பழனி, வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top