Close
ஏப்ரல் 4, 2025 11:39 காலை

திண்டிவனத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டடம், வந்தவாசியை அடுத்த காட்டேரி பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் இரட்டணையில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வந்தவாசி அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மனைவி பரமேஸ்வரி (46), வெங்கடேஷ் மனைவி ஞானம்மாள் (55), பெருமாள் மனைவி பட்டு (55), கார்த்திக் ராஜா மனைவி பிரசாந்தி (25), திருநாவுக்கரசு மனைவி அபிராமி (40), அவரது மகள்கள் கலைச்செல்வி (16), தமிழ்ச்செல்வி (17), சுப்பிரமணி (50) மற்றும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top