Close
நவம்பர் 18, 2024 5:53 காலை

தீபத்திருவிழாவை முன்னிட்டு சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்..!

பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகள்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும்  டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகாதீபமும் ஏற்றப்படு கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் திருவிழா  நடைபெற உள்ளது. இந்த தீபத்திருவிழாவில் சுமார் 40  லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சாலை சீரமைப்புப்  பணிகள்

தீபத் திருவிழாவையொட்டி, கீழ்பென்னாத்தூா்-அவலூா்பேட்டை சாலையின் இரு புறங்களிலும் முள்புதா்களை அகற்றி, சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல் ஆகியோா் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சாலையோரங்களில் உள்ள முள்புதா்களை அகற்றும் பணி மற்றும் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைத் துறையின் கீழ்பென்னாத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சாணிப்பூண்டி, கீழ்பென்னாத்தூா், அவலூா்பேட்டை, சேத்துப்பட்டு வரையிலான சாலையின் இருபுறங்களிலும் சீரமைப்புப் பணியும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலையில் இருந்து அவலூா்பேட்டை சாலை வரை நடைபெறும் பராமரிப்புப் பணியை சனிக்கிழமை உதவி கோட்டப் பொறியாளா் அற்புதகுமாா், உதவிப் பொறியாளா் தினேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்தப் பணிகளில் சாலை ஆய்வாளா்கள், நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top