Close
நவம்பர் 18, 2024 9:45 காலை

திம்மராஜாபேட்டை கசக்குட்டையில் கலக்கும் கழிவுநீர்.. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

திம்மராஜாம்பேட்டை ஊராட்சியில் உள்ள கசக்குட்டை பகுதியில் கழிவுநீர் விடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும் கோரிக்கை எழுந்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், திம்மராஜாம்பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டாவது வார்டு உறுப்பினர் டில்லிகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் ஊராட்சியில் உள்ள கசக்குட்டை பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கழிவுநீர்களை குலத்தில் விட்டு சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவினை அளித்தார்.

அம்மனுவில் , நான் எங்களது கிராம ஊராட்சிமன்றத்தின் 2-வது வார்டு உறுப்பினராக உள்ளேன். மேற்படி கசக்குட்டையானது எங்கள் கிராமத்தில் உள்ள ம நீர்நிலைகள் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிக்களுக்கு மிகுந்த குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம்

மேற்படி இடத்தில்தான் எங்கள் கிராம பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை மோட்டார் பம்ப் மற்றும் கூட்டுக்குடிநீர் தேக்க தொட்டி ஆகியவை அமையப்பட்டுள்ளது. இதில் பல ஆண்டுகளாக அருகில் வசிக்கும் நபர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது கலந்து மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அருகில் ஒரு நபர் மீன்தொட்டி கட்டி மீன் வளர்ப்பதுடன் அதன் கழிவுகளை மேற்படி கசக்குட்டையில் கொட்டுவதால் தண்ணிரில் புழு, பூச்சிகள் வளர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து வட்டாட்சியர், வாலாஜாபாத், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஆகியோர்களுக்கு கடிதம் மூலம் அளித்த புகாரின்பேரில், நேரடியாக சம்மந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்து கிட்டத்தட்ட பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தாங்கள் மேற்படி இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைப்பதுடன் சுற்றுச்சுவர் அமைத்து தர சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top