Close
நவம்பர் 21, 2024 8:57 காலை

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 486 மனுக்கள் அளிப்பு..!

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆரணி ஆர்டிஓ

திருவண்ணாமலையில், நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 486 மனுக்கள் வரப்பெற்றன

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 486 பேர் டிஆர்ஓவிடம்  கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 486 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன் மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிக்க வரும் பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மனுக்களை அரசு அலுவலர்களைக் கொண்டு கட்டணம் இல்லாமல் எழுதிக் கொடுக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளிக்கல்வி உதவித்தொகை, நல திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி,திட்ட அலுவலர் பழங்குடியினர் நலத்துறை கலைச்செல்வி  மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற கோட்ட அலுவலா் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

செய்யார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுனுக்தலின்படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 69 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற சார் ஆட்சியர் பல்லவி வர்மா அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top