திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கு பெற்ற திருப்புகழும் பரதமும் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் யுனிவர்சல் நட்சத்திர ஆர்ட் கல்ச்சுரல் பவுண்டேஷன் சார்பில் செம்மொழி உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கேற்று திருப்புகழும் பரதமும் என்ற தலைப்பில் பரத நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கு அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத் தலைவர் சின்ராஜ், தலைமை தாங்கினார் .தமிழ் செம்மல் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ பால சரஸ்வதி கலைக்கூடத்தின் நிறுவனர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து திருப்புகழும் பரதமும் என்ற தலைப்பில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரத நடனம் நிகழ்த்தி செம்மொழி உலக சாதனை நிகழ்த்தினார்கள்.
உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆகாஷ் அர்ப்பணா, ஹோட்டல்ஸ் நிர்வாகியும் மணிமண்டப அறக்கட்டளை உறுப்பினருமான முத்துகிருஷ்ணன் விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் அருணகிரிநாதர் மணிமண்டப செயலாளர் அமரேசன், பொருளாளர் தனுசு, அறுபடை வீடு அருணாச்சலம், அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் ராஜாராம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அருணகிரிநாதர் அறக்கட்டளை உறுப்பினர் நாராயணமூர்த்தி, அருண் தனுசு மற்றும் ஆன்மீக முக்கிய பிரமுகர்கள், நடன ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை கிரிவலம் வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தைகளின் பரத நடனத்தை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு மணிமண்டப அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பாராட்டு
இந்நிகழ்வில், கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி தலைவரும், அருணகிரிநாதர் மணிமண்டப தலைவர் சின்ராஜ்,அவர்களுக்கு புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சேவா கலா ரத்னா’ விருதினை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.